Wednesday, April 1, 2015

ஒன் ப்ளஸ் ஒன் (One Plus one )

ஒன் ப்ளஸ் ஒன் (One Plus one ) - சமீப காலமாக இந்த பெயரை தங்கள் கேட்டிருக்க வாய்ப்புகள் அதிகம்.என்ன இது ஏதோ ஒன்றாம் வாய்பாடு மாதிரி இருக்கிறதே என்று நீங்கள் எண்ணி இருக்கலாம். ஆனால் உண்மையில் இது ஒரு புதிய செல்பேசி (மொபைல் ) . சந்தையில் அறிமுகமாகி அனைவரிடமும் வரவேற்ப்பை பெற்றுருக்கிறது.


இந்த மொபைல் பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் முன் உங்களிடம் ஒரு கேள்வி எழலாம் , இந்த மொபைல் அறிமுகபடுத்திய நிறுவனம் மற்றொரு சீன நிறுவனம் தானே இதில் என பெரிய ஒரு ஆச்சிரியம் என நீங்கள் கேட்கலாம். உண்மைதான் ஆனால் மற்ற சீன நிறுவங்களை விட இந்த நிறுவனம் பல புதிய யுத்திகளை பயன்படுத்தி இன்று ஆப்பிள் ,சாம்சங் மற்றும் பல முன்னணி நிறுவனங்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

சிறு வரலாறு :
சற்று பின் நோக்கி பயணித்து இந்த நிறுவனம் உருவான கதையை பார்ப்போம்.
டிசம்பர் 16 ,2013 பீட் லாவ் (Pete Lau) என்பவரால் ஒன் பிளஸ் ஒன் தொடங்கப்பட்டது.இவர் ஓப்போ (OPPO) என்கின்ற பிரபல சீன மொபைல் நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் ஆவார் . இந்நிறுவனத்தின் குறிக்கோள் (Motto ) குறைந்த விலையில் சிறந்த மொபைல் தயாரிக்க வேண்டும் என்பது தான்.நாங்கள் பெயரளவில் மட்டும் வித்தியாசமாக இல்லாமல் செயலிலும் இருப்போம் என்று இவர் கூறுகிறார். பிரபல நிறுவனம் சயனொஜென்  (Cyanogen Inc ) உடன் பிரத்தியேக உரிம ஒப்பந்தம் மேற்கொண்டு  இந்நிறுவனத்தின் மென்பொருளை சயனொஜென்  நிறுவனத்தின் கஸ்டம் (custom ) அண்டுராயிடை  (Android) பயன்படுத்தி கொள்ள முடிவு செய்யப்பட்டது .ஆனால் இந்தியாவில் இந்த ஒப்பந்தம் செல்லாமல் போனது வேறு கதை .
முதல் ஒன் ப்ளஸ் ஒன் (One Plus one ) மொபைல் ஏப்ரல் 23,2013 ஆம்  தேதி வெளியிடப்பட்டது.17 நாடுகளில் அறிமுகபடுத்தப்பட்டு இந்தியாவிலும் டிசம்பர் 2014 இல் அமேசான் இணையத்தளத்தின்  மூலம் விற்பனைக்கு அறிமுகமாகியது . தற்பொழுது 35 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த மொபைல் வெற்றிகரமாக விற்பனையாகி வருகிறது.

இந்த மொபைல் போனில் உள்ள பல்வேறு அம்சங்கள் பற்றி மற்றொரு பதிவில் பார்க்கலாம்...


வலை இன்னும் வளரும் .........(To be contd.)




0 comments:

Post a Comment