Thursday, September 3, 2015

ப்ளாக்பெர்ரி நிறுவனத்தின் வெனிஸ்ஆண்டுராய்டு மொபைல்

ப்ளாக்பெர்ரி நிறுவனத்தின் ஆண்டுராய்டு மொபைல்

மொபைல் போன் விற்பனையில் முன்பு முடிசூடா மன்னனாக விளங்கிய ப்ளாக்பெர்ரி நிறுவனம் ஆப்பிள்,ஆண்டுராய்டு மொபைல்  வளர்ச்சிக்கு முன் ஈடுகொடுக்க முடியாமல் மிகவும் பின்தங்கி விட்டது நம்மில் பலரும் அறிவோம்.சந்தையில் மீண்டும் ஒரு முயற்சியாக ஒரு புதிய மொபைல் போன் வருகையை சில வலைத்தளங்கள் முன் கூட்டியே லீக் செய்துள்ளது.

வெனிஸ் என்று கூறபடுகின்ற இந்த மொபைல் போனின் படங்கள் tinhte.vn என்ற வலைதளம் வெளியிட்டுள்ளது.

இந்த படங்களை கிழே  காணுங்கள் ,


மேலே உள்ள படங்களில் இருப்பதை பார்த்தால் வெனிஸ் பிளிப் மாடல் போல தெரிகின்றது.இந்த மொபைலில் பழைய ப்ளாக்பெர்ரி மொபைலில் உள்ளது போல கி போர்டு உள்ளதை காணமுடிகின்றது.மேலும் கிழே ஒலி பெருக்கி இருக்கின்றது.18 MP கேமரா , இரண்டு LED யுடன் இருக்கின்றது.




ஸ்க்ரீன் அளவு 5 அல்லது 5.5 இன்ச் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது . எச் டி இருக்குமா என்பது தெரியவில்லை.

இந்த படங்களில் இருக்கும் மொபைல் சற்றே விலை குறைந்த பொருட்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது போல தெரிகின்றது.ஆகவே விலை குறைவாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.








0 comments:

Post a Comment