Monday, May 4, 2015

கூகிளின் ப்ராஜெக்ட் Fi (Project Fi by Google )




கூகிள் நிறுவனம் அதனுடைய முன்னணி பார்ட்னர்களுடன் , ஹார்டுவேர் உற்பத்தியாளர்கள் , பயனர்களுடன் இணைந்து ப்ராஜெக்ட் பய் (Fi ) என்ற திட்டத்தின் மூலம் அதிவேகமான மற்றும் சுலபமான வயர்லெஸ் அனுபவத்தை தர உள்ளது .

நெட்வொர்க் (Network ) :


ப்ராஜெக்ட் Fi,புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனேக இடங்களில் உங்களுக்கு  அதிவேக மற்றும்   சிறந்த wifi இணைப்புகளை  கொடுக்கின்றது.

நெட்வொர்களுக்குள் சிறந்த நெட்வொர்க் பயன்படுத்தல் 



நெட்வொர்கின் இணைப்பு தரம் நாம் ஒரு இடதில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகரும் பொழுது வேறுபடுகின்றது. பயனாளர்களுக்கு சிறந்த இணைப்பை கொடுப்பதற்காக Fi புதிய மேம்பட்ட தொழில்நுட்பத்தை நுண்ணறிவாக பயன்படுத்தி எப்பொழுதும் உங்களை wifi  முலமாகவோ அல்லது LTE முலமாகவோ அதிவேகமான நெட்வொர்க் இணைப்பை கொடுக்கின்றது .





இரு 4G நெட்வொர்க்கின் LTE இணைப்பின் வேகம் 
தொன்றுதொட்டு ,ஒரு நெட்வொர்க் டவருடன் மட்டுமே நமது மொபைல் தொடர்பில் இருக்க முடியும் .ஆனால் Fi மூலம் 
இரண்டு சிறந்த 4G LTE நெட்வொர்க்கின் இணைப்பை பெற்று ஒன்றுக்கும் மேற்பட்ட டவர்களுடன் இனைந்து நாம் அதிவேக இணைப்பை பெற முடியும்.

எப்பொழுதும் அதிவேக தொடர்பில் இருக்கலாம் 

ஒரு நெட்வொர்கில் இருக்கும் பொழுது மற்றொரு பார்ட்னெர் நெட்வொர்கில் வலுவான 4G LTE சமிக்ஞை(Signal ) இருந்தால் Fi அதுவாகவே நம்மை அந்த நெட்வொர்கிற்கு மாற்றி விடுகின்றது.

சிறந்த wifi இணைப்பு பெறலாம் 
பல WIFI ஹாட்ஸ்பாட்கள் இருகின்றது ஆனால் எல்லாம் சிறந்த தரத்தில் இல்லை . Fi நம்மை எப்பொழுதும் இருக்கின்ற லட்சக்கணக்கான WIFI ஹாட்ஸ்பாட்களில் தானாகவே சிறந்த WIFI ஹாட்ஸ்பாட்டுடன் நம்மை இணைகின்றது.இந்த தொழில்நுட்பத்தின் மூலம் நமது மாதாந்திர பில் கம்மியாகின்றது ஏனென்றால் WIFI பயன்பாடு இலவசமாகும்.

சிறந்த பாதுகாப்பு 

நமது தகவல் WIFI ஹாட்ஸ்பாட் பயன்படுத்தும் பொழுது என்க்ரிப்ட் செய்யப்படுகின்றது ஆகையால் நாம் கவலையின்றி இருக்கலாம்.


நமது மொபைல் எண்ணை ஒன்றுக்கும் மேற்பட்ட கருவிகளில் பயன்படுத்தலாம் 



Fi நமது மொபைல் எண்ணை நமது மொபைலில் மட்டுமல்லாமல் நமது லேப்டாப் ,டாப்லெட் போன்ற கருவிகளிலும் பயன்படுத்த உதவுகின்றது.


WIFI மூலம் அழைப்புகள் மற்றும் எஸ் எம் எஸ் சேவை :
நமது வீட்டிலோ அல்லது நாம் காபி அருந்தும் காபி ஷாப் களில் இருக்கும் WIFI  பயன்படுத்தி நாம் அழைப்புகள் மற்றும் எஸ் எம் எஸ் (SMS ) சேவைகளை உபயோகிக்கலாம்.



WIFI மற்றும் செல் நெட்வொர்க்கின் இடையே தடையற்ற இணைப்பு :
நாம் WIFI  தொடர்பு எல்லையில் இருந்து தள்ளி போகும் பொழுது Fi தானாக சிறந்த செல் நெட்வொர்குடன் நம்மை இணைத்து நமது அழைப்புகள் மற்றும் பிற சேவைகள் பாதிக்காமல் செய்கின்றது.


மேலும் தெரியவேண்டியவை :

  1. முதலில் இந்தியாவில் இந்த சேவை அறிமுகபடுத்த படுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அமெரிக்காவில் இச்சேவை கிடைக்கும் .  
  2. இந்த சேவை இந்தியாவில் அறிமுகபடுத்தப்பட்டாலும் நமக்கு கட்டுபடியாகுமா என்று தெரியவில்லை என்னென்றால் Fi ஆரம்ப சேவையை பயன்படுத்த கட்டணம் $20 ஆகும்(இந்திய மதிப்பில் சுமார் 1200 ருபாய் ). 
  3. இந்த சேவையை எல்லா மொபைலிலும் உபயோகிக்க முடியாது என்று கூகிள் அறிவித்துள்ளது. கூகிள் நிறுவனத்தின் நேக்குசஸ் (Nexus 6) மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த மொபைல் இந்திய மதிப்பில் 40000 மேல் ஆகும்.




Fi பற்றி மேலும் தெரிந்து கொள்ள கிழே உள்ள லிங்க்ஐ அழுத்தவும் ,

Fi Link


0 comments:

Post a Comment