'>

Sleep monitoring apps

தூக்கத்தை கண்காணிக்க உதவும் Apps

Apps to help to maintain our fitnesspps

உடல்நலத்தை பேண உதவும் சில பிட்நெஸ் ஆப்

Project Fi by Google

கூகிளின் ப்ராஜெக்ட் Fi

Worlds First 4 GB Mobile

உலகின் முதல் 4GB RAM மொபைல்

Media Players to convert Ordinary TV to SMART TV

SMART டிவி இல்லையா கவலை இல்லை

Tuesday, April 28, 2015

ரூடிங் பற்றி நீங்கள் அறிய வேண்டியவை /All you wanted to know about Rooting


ரூடிங் (Rooting) என்றால் என்ன :

ஆண்டுராய்டு உலகில் இந்த சொல்லியல்(Terminology) மிகப் பிரபலம் .எதற்காக நமது மொபைலை ரூட் செய்ய வேண்டும் , ரூடிங் என்றால் என்ன , ரூடிங் செய்வதால் என்ன பயன்கள் , மேலும் ரூடிங் செய்வதனால் நமது மொபைலுக்கு எவ்விதமான பாதிப்பு நேரலாம் என்பதைப் பற்றியும் விரிவாக பார்க்கலாம் .

ரூடிங் செய்வதற்கு முன் கவனிக்க வேண்டியவை 

  • முக்கியமாக கவனிக்க வேண்டியது , ரூடிங் செய்வதனால் உங்களது வாரண்டி /காரண்டி பாதிக்குமா என கண்டறிய வேண்டும் .உங்களது மொபைல் சேவை மையத்தை தொடர்பு கொண்டு நீங்கள் இந்த தகவலை அறியலாம் .
  • பிரிக்கிங் (Bricking ) : ரூடிங்கை முறையாக செய்யாவிடில் நமது மொபைல் பிரிக் (brick) போன்று பயனற்று போகும் அதாவது நமது மொபைலின் மென்பொருள் (சாப்ட்வேர்) பழுதாகி நமது மொபைலை பயன்படுத்த முடியாமல் போக வாய்ப்புள்ளது .அதனால் மிகவும் எச்சரிக்கையாக ரூடிங்  செய்ய வேண்டும்.உங்களுக்கு சிறிதளவு சந்தேகம் இருந்தாலும் நீங்கள் இந்த முறையை செய்ய வேண்டாம். இதற்கு மேலும் நீங்கள் ரூடிங் செய்ய முடிவெடுத்தால் அதற்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு.

ரூடிங் என்றால் என்ன?

உங்களது மொபைலை ரூட் செய்வதனால் சூப்பர் யூசர் செய்யும் அனைத்து செயைல்களை செய்ய சாத்தியமாகும்.ரூடிங் செய்வதற்கு முன் இது சாத்தியம் இல்லை. மேலும் உங்களுக்கு பிடித்தமான கஸ்டம் ரோம் (Custom ROM ) பதிவேற்றம் செய்யலாம் , உங்களது மொபைலின் ஆற்றலை அதிகரிக்கலாம்,பேட்டரியின் சேமிப்பை நீடிக்கலாம் . ஒரு சில மென்பொருள்களை இன்ஸ்டால் (Install ) செய்வதற்கும் ரூடிங் செய்திருப்பது இன்றியமையாததாகும் .

ரூடிங் என்ற பெயர்க்காரணம் யூனிக்ஸ் - இல்  (UNIX ) இருந்து மருவி வந்த சொல்லியல் ஆகும் .யுனிக்ஸில் சூப்பர் யூசர் எல்லா வித கோப்புகளை (file )மற்றும் போல்டர்களை (folder ) படிக்க/எழுத (Read /Write ) அனுமதி உண்டு .அதுபோன்று மொபைல் போனில் ரூடிங் செய்வதனால் நமது மொபைலில் உள்ள மென்பொருளை நமக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க முடியும்.நமது மொபைல் உற்பத்தியாளர் பொதுவாக இது போன்ற சூப்பர் யூசர் அனுமதி நமக்கு கொடுப்பது இல்லை.அதற்கும் ஒரு காரணம் உண்டு.நம்மில் எல்லாருக்கும் ரூடிங் போன்ற தொழில்நுட்பம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு.அவ்வாறிருக்க எசகுபிசகாக எதாவது செய்து விட்டால் முன்பு கூறியவாறு நமது மொபைல் செயலிழக்க வாய்ப்புகள் அதிகம்.
ஆகையால் இது போன்ற காரணங்களால் எல்லா உற்பத்தியாளர்களும் அவர்கள் தயாரிக்கும் மொபைல்களை லாக் (lock ) செய்து வெளியிடுகிறார்கள் .
ஆப்பிள் போனில் இவ்வாறு செய்தால் அது ஜெயில் பிரேகிங்(Jailbreaking ) என்று கூறபடுகின்றது

ரூடிங் செய்வதால் ஏற்படும் பலன்கள் :

கஸ்டம் ரோம் (ROM ):
ரோம் (ROM ) நமது மொபைலை இயக்கும் முதன்மையான மென்பொருள் ஆகும்.இந்த மென்பொருள் நமது மொபைலின் உள்ளே உள்ள ரோம் சிப்பில்  (chip ) உள்ளது .நாம் வாங்கும் எல்லா மொபைலிலும் தொழிற்சாலையில் இந்த மென்பொருள் பதிவேற்றம் (Load ) செய்யப்படுகின்றது . ஒவ்வொரு ஆன்டுராய்டு பதிப்பு (Android version ) வெளியிடப்படும் பொழுது நமது உற்பதியாளர் நமக்கு அந்த அப்டேட் (Update ) தருவார்கள் என்று கண்டிப்பாக கூற முடியாது. இதெற்கெல்லாம் நமக்கு ஒரே தீர்வு இந்த கஸ்டம் ரோம் .இணையதளங்களில் பலவிதமான ரோம் கிடைகின்றது.ஒவோன்றிலும் வேறுபட்ட செயல்திறன்கள் (Features ) உள்ளது .நமக்கு எந்தவிதமான ரோம் ஏற்றதோ நாம் அதை நமது மொபைலில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.


செயல்திறன் /ஆற்றல் அதிகபடுத்தல் :
ரூட் செய்யபட்ட மொபைலில் இன்ஸ்டால் செய்வதற்கென்றே ஏராளமான ஆப்(App ) கிடைகின்றது .இவை பயன்படுத்துதல் மூலம் நமது மொபைலின் ஆற்றலை வெகுவாக அதிகரிக்கலாம் .மேலும் பாட்டரி ஆற்றலையும் அதிகரிக்க முடியும்


ஆண்டுராய்டின் புதிய பதிவுகள் 
 கூகிள் நிறுவனம் ஆண்டுக்கு ஒரு புதிய மென்பொருளின் பதிவை வெளியிடும்.ஒரு சில மொபைல்களுக்கு மட்டுமே இந்த பதிவை (version ) பதிவிறக்கம் செய்ய உற்பத்தியாளர் முடிவு மேற்கொள்வர்   . மற்ற மொபைல்களுக்கு இந்த ரூடிங் செய்யதால் மட்டுமே இந்த புதிய பதிவை பெற முடியும்.

மேலும் சில பயன்கள் இருக்கும் அதே வேளையில் , சில தீமைகளும் உள்ளது.
முன்பு கூறியவாறு ப்ரிக்கிங் ஆக வாய்ப்புகள் உள்ளது , மேலும் சில வைரஸ் நுழையவும் வாய்ப்பு உள்ளது .

இவ்வாறாக ரூடிங் முறையை கவனமாக மேற்கொண்டால் நமக்கு ஏற்ற லேட்டஸ்ட் மென்பொருளை நமது மொபைலில் பெற்று பயன் பெறலாம்.




















Sunday, April 19, 2015

SMART டிவி இல்லையா கவலை இல்லை (Media Players to convert Ordinary TV to SMART TV)

முன்னுரை:-

      நம்மில் பலரிடம் smart டி.வி இல்லை என்ற கவலை இருக்கும். நானும்  அப்படி கவலை பட்டதுண்டு. ஆனால் அந்த கவலையை போக்க தற்பொழுது ஒரு சுலபமான வழி வந்துள்ளது. அதுதான்  மீடியா players என்ற ஒரு சிறு பெட்டி. இந்த கருவியை நாம் வாங்கி நமது சாதாரண டி.வியுடன் இணைத்தால்  Smart டி.வி தயார். இதற்காக நாம் பெரும் செலவும் மேற்கொள்ள தேவையில்லை. சில ஆயிரம் ரூபாயில் இந்த கருவியை நாம் வாங்க முடியும். ஆனால் இந்த கருவியை இந்தியாவில் பயன்படுத்த இன்டர்நெட் வேகம் (சராசரி) பெரிதும் உதவாதென்றே சொல்லலாம். குறைந்தது 2 MBP s வேகம் தேவைப்படும். மேலும் உபயோக அளவு (limit)இருக்கக் கூடாது. ஏனென்றால்  இந்த கருவியிலுள்ள சேவைகளை பயன்படுத்த internet
வசதி தேவைப்படும். US  மற்றும் UK  நாடுகளில் இந்த கருவிகளின் பலவிதமான சேவைகளை நாம் பயன்படுத்தலாம்.இந்தியாவில் NETFLIX போன்ற சேவைகள் பயன்படுத்த முடியாததால் பெரும்பாலும் Youtube  அல்லது USB மூலம் நமது நமது கணினியில் உள்ள படங்களை பார்க்க மட்டுமே உதவும்.இந்த கருவிகளை நமது தொலைக்காட்சிப்பெட்டியில் இணைக்க இரு வழிகள் உள்ளத்.

1) LCD /LED டி.வி :- நாம்   LCD /LED டி.வியை HDMI கேபிள் மூலம் இக்கருவியில் இணைக்கலாம்.WiFi மூலம் இக்கருவியை செட்அப் செய்து இதன் சேவைகளை கண்டு  களிக்கலாம்.

2) பழைய டி .வி :-  LCD /LED டி.வி இல்லையென்றால் நாம் காம்பொசிட்(Composite) கேபிள் மூலம் இணைக்க வசதி உண்டு.


1)Chrome Cast (குரோம் காஸ்ட் )

                      கூகிள் நிறுவனத்தின்  தயாரிப்பான இது ஒரு சிறு USB போன்ற கருவியாகும். இக்கருவியை  நாம் நமது டி.வியின் HDMI போர்ட்டில் மட்டுமே இணக்க முடியும். நமது ஆண்டுராயிட் தொலைபேசி, டாப்லெட் (Tablet ), i phone, i pad, Mac மற்றும்  விண்டோஸ் லேப்டாப் மூலம் நமது பிடித்தமான நிகழ்சிகளை டி.வியில் கண்டு மகிழலாம். நமது மொபைலை மிறர் (mirror )  - அப்படியே டி.வியில் இயக்கும் வசதி உள்ளது. கேம்  மற்றும் பல சேவைகளை உள்ளடக்கி இருக்கின்றது. விலையும் மிக குறைவு.




2)ஆப்பிள் டிவி :

                      ஆப்பிள் நிறுவனத்தின் படைப்பான ஆப்பிள் டிவி உங்களுக்கு பலவித பொழுதுபோக்கு, திரைப்படங்கள், இசை மேலும் பலவிதமான காரியங்களை சாத்தியமாக்கின்றது. மேலும் உங்களது I-Phone அல்லது MAC கம்யூட்டர்களை    டிவியில்கண்டு இயக்கலாம் . நமது I phone இல் உள்ள படங்கள், வீடியோ பல்லாயிரக்கணக்கான டிவி நிகழ்சிகள் , திரைப்படங்கள், I Tunes இல்  உள்ள நிகழ்சிகள் இவையல்லாம்   1080p  HD வடிவில் நீங்கள் கண்டு களிக்கலாம். மேலும் Netflix ( இந்தியாவில் தற்பொழுது இல்லை ), You tube, Flickr மேலும் பல சேவைகளை நாம் பயன்படுத்திகொள்ளலாம்.



Air Play:

                      நமது I pad, Iphone இல் இருந்து நாம் கேம் விளையாட, படங்களை நாம் wireless மூலம் டிவி இல் கண்டு மகிழலாம். ஆனால் உங்களது USB, portable hard disc யை  நீங்கள் இதனுடன் இணைக்க இயலாது.

3) Western Digital TV

                     Western Digital நிறுவனத்தின் படைப்பு இது. நீங்கள் உங்களது டிவியில் இணைத்து பலவித சேவைகளை அனுபவிக்கலாம்.மிகவும் எளிதாக நமது டி .வி யுடன் இணைத்துக் கொள்ளலாம் .நெட் பிலிக்ஸ் (Netflix ),  யூடியூப்  (Youtube ) போன்ற  ஆப் (App ) களை உள்ளடக்கி உள்ளது.மேலும் எளிதாக்க நமது செல்பேசியில் ஒரு ஆப் (App) பதிவிறக்கி நாம் இக்கருவியை சுலபமாக இயக்க முடியும் . USB இணைக்க இக்கருவியில் வசதி உள்ளது .இதனால் நமது கணினியில் இருந்து திரைப்படங்கள்,புகைப்படங்கள் ,விடியோக்களை பெரிய திரையில் கண்டு களிக்கலாம் .


4)Roku டிவி :

இது மற்றொரு நிறுவனத்தின் தயாரிப்பாகும். WD பெட்டியில் உள்ள அனைத்து அம்சங்களும் இதில் உள்ளது. மேலும்  சில  டி.விகளில் இதை உள்ளே வைத்து தயாரிக்கப்படுகின்றது.









Saturday, April 11, 2015

ஒன் ப்ளஸ் ஒன் (One Plus one ) Part 3- சிறப்பு அம்சங்கள்

போன பதிவில் இந்த மொபைலின் பல்வேறு Technology அம்சங்கள் பற்றி பார்த்தோம்.
இந்த பதிவில் அதை பற்றி சிறிது விரிவாக பார்ப்போம்,

1)ப்ரோசெசர் (Processor ) :
இந்த மொபைலின் உள்ள சக்தி வாய்ந்த Qualcomm© Snapdragon™ 801 processor with 2.5GHz Quad-Core CPU உள்ளது . Qualcomm நிறுவனத்தை பற்றி அனைவரும் அறிந்து இருக்கலாம்.உலகின் பல முன்னணி மொபைல் நிறுவனத்தில் Qualcomm நிறுவனத்தின் ப்ரோசெசர் பயன்படுத்தப்படுகின்றது (உதாரணம் சாம்சங் ).இந்த ப்ரோசெசர் பல ப்ரோசெஸ்  (Process)  களை சுலபமாக இயக்க வல்லது . மொபைல் போன்களின் ஆற்றலை கணிக்க உதவும் அன்டுடு (Antutu ) முடிவுகள் கீழே பார்க்கலாம்,





ஒன் ப்ளஸ் ஒன் கூகிள் நெக்சஸ் மொபைலுக்கு அடுத்தபடியாக உள்ளது . ஒன் ப்ளஸ் ஒன் இன் விலையை (இந்திய விலை 23000 vs நெக்சஸ் 6 - 49000) பார்கையில் எந்தவித தயக்கமின்றி நாம் தேர்ந்தெடுக்கலாம்.

2)Cyanogen UI :
உலகளவில் ஆண்டுராய்டு(android ) OS ஐ  தங்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து பிரபலமான Cyanogen நிறுவனம் , முதன் முதலில் மொபைலுடன் சேர்த்து அறிமுகமாகி உள்ளது . இன்னொரு சிறப்பம்சம் என்வென்றால் உங்கள் மொபைலை நீங்கள் ரூட் (Root ) செய்ய வேண்டிய அவசியம் இல்லை (ரூடிங் -Rooting என்றால் என்வென்று மற்றொரு பதிவில் விரிவாக பார்க்கலாம் ). Cyanogen பயன்படுத்துவதில் என்ன வித்தியாசம் என்றால் பல நுண்ணிய அளவில் customisation (நமக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்தல் ) செய்து கொள்ள முடியும்.இவ்வசதி ஸ்டாக் ஆண்டுராய்டில் (stock  android )  சாத்தியம் இல்லை .



3)சேமிப்பு / கொள்ளலவு :
இந்த மொபைல் 16அல்லது 64 GB கொள்ளலவில் கிடைக்கும். மிக விரைவாக நமது தகவல்கலை காபி (copy ) செய்யலாம் . கூடுதல் மெமரி கார்டு பொருத்துவதற்கான வசதி இல்லையென்றாலும் 64 GB போதுமானது .
மேலும் 1866MHz  வேகத்தில் இயங்கும் 3 GB LP-DDR3 RAM குறைபாடற்ற பல்பணிகளை (Multitasking ) அனுமதிக்கிறது. 

4)கேமரா :
பின் கேமரா  :13 மெகாபிக்ஸல் சோனி Exmor IMX214 , F / 2.0 துளை (Aperture )கொண்ட கேமரா ,  குறைந்த ஒளியில் கூட  அற்புதமான படங்கள் எடுக்க வல்லது . எங்கும் பிரகாசமான, கூர்மையான புகைப்படங்கள், எப்போது ஷூட்.மேலும் இதில் உள்ள இரட்டை LED ஃப்ளாஷ் இரவில் கூட சிறந்த படங்களை எடுக்க உதவும் .




முன் கேமரா : 5 மெகாபிக்ஸல் உங்களது செல்பிகளை சிறப்பாக எடுக்க உதவும்.

5)பேட்டரி :  குவால்காம் © ஸ்னாப் டிராகன் கொண்டுள்ள சிப்செட்( Qualcomm© Snapdragon™ 801 chipset) மற்றும்  3100 mAh பேட்டரி ,CABC and DRAM (Display RAM) தொழில்நுட்பம் கொண்டுள்ளது.இந்த தொழில்நுட்பங்கள் மின்சாரக்குறைத்து , நாள்முழுதும் பேட்டரி நீட்டிக்க    உதவுகின்றது .அனால் இந்த பேட்டரியை கழற்ற முடியாது .



6)எளிதான  திரை சைகைகள் :(On screen gestures for easy control)
முன் எப்போதும் விட விரைவில் உங்கள் பிடித்த பயன்பாடுகளை துவக்கவும். இரண்டு முறை தட்டி, உங்கள் திரை விழிக்க வைக்கலாம்  அல்லது உங்களுக்கு விருப்பமான பயன்பாட்டை தொடங்க திரையில் ஒரு சாதாரண படத்தை வரைய வேண்டும்(உதாரணம் O  வரைந்தால் கேமரா துவங்கும் , V - ஃபிளாஷ்)

மேலும் ,



Wi-Fi 2.4/5GHz
802.11 b/g/n/ac

Power off
Alarm

GPS & GLONASS

NFC

USB OTG

Gyroscope

Compass

Proximity Sensor

Light Sensor

Accelerometer

Friday, April 3, 2015

ஒன் ப்ளஸ் ஒன் (One Plus one ) Part 2- அம்சங்கள்

இந்த மொபைல் தொலைபேசியின் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் என்னவென்று பார்ப்போம் , இவை ஒன் ப்ளஸ் ஒன் இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது ,




அடிப்படை அம்சங்கள்
கலர் (Colour)
பட்டு வெள்ளை / மணற்கல்  /   பிளாக்  /  Silk White/Sandstone Black
அளவு (Dimensions)
152,9 x 75.9 x 8.9 மிமீ/152.9 x 75.9 x 8.9 mm
எடை (Weight)
எடை 5.71 அவுன்ஸ் (162 கிராம்) /5.71 ounces (162 g)
ஆண்ட்ராய்டு(Operating System)
ஆண்ட்ராய்டு 4.4 அடிப்படையில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சியனொஜென் 11-களை/Cyanogen 11S based on Android 4.4
CPU
குவால்காம் © ஸ்னாப் 2.5GHz Quad-core CPU கள் ™ 801 செயலி
/ Qualcomm© Snapdragon™ 801 processor with 2.5GHz Quad-core CPUs
GPU
Adreno 330, 578MHz
ரேம்(RAM)
3 ஜிபி எல்பி, DDR3/3 GB LP-DDR3 at 1866MHz
கொள்ளவு(Storage)
 16/64 ஜிபி eMMC 5.0, கிடைக்கும் கொள்ளளவு வேறுபடுகிறது16/64 GB eMMC 5.0, available capacity varies
சென்ஸார்ஸ்(Sensors)
Accelerometer, Gyroscope, Proximity and Ambient Light
பேட்டரி(Battery)
பொதிந்த ரிச்சார்ஜபிள் 3100 mAh Lipo பேட்டரி / Embedded rechargeable 3100 mAh LiPo battery
Max. SAR
தலை:  0,270 W / kg, உடல்: 0,540 W / kg/ Head: 0.270 W/kg, Body: 0.540 W/kg


தொடு திரை
அளவு (Size)
5.5 அங்குல JDI / 5.5 inch JDI
Resolution
1080 முழு எச்டி (1920 x 1080 பிக்சல்), 401 பிபிஐ
டோல் கொண்டு LTPS ஐபிஎஸ் Type/ 1080p Full HD (1920 x 1080 pixels), 401 PPI
வகைType
LTPS IPS with TOL
பாதுகாப்பு (Protection)
(கார்னிங் © கொரில்லா © கண்ணாடி 3 / Corning© Gorilla© Glass 3)

கேமரா 





சென்சார் (Sensor)
13 மெகாபிக்சல் - சோனி Exmor IMX 214 / 13 Megapixel - Sony Exmor IMX 214
லென்ஸ்(Lenses)
6 லென்ஸ்கள் விலகல் மற்றும் வண்ண பிறழ்ச்சி தவிர்க்க
/ 6 lenses to avoid distortion and colour aberration
ஃப்ளாஷ் (Flash)
Dual-LED
Aperture
f/2.0
முன் கேமரா (Front Camera)
5 மெகாபிக்சல் Distortion free / 5 Megapixel - Distortion free
வீடியோ  (Video)
ஸ்டீரியோ பதிவு ஸ்லோ மோஷன் கொண்ட வீடியோ 20fps மணிக்கு 720p வீடியோ /4K resolution video with stereo recording Slow Motion: 720p video at 120fps

இணைப்பு

ஜிஎஸ்எம் (GSM)
                            GSM: 850, 900, 1800, 1900MHz
                              WCDMA: Bands: 1/2/4/5/8
                              LTE: Bands: 1/3/4/7/17/38/40
Wi-Fi
Dual-band Wi-Fi (2.4G/5G) 802.11 b/g/n/ac
ப்ளூடூத் (Bluetooth)
ப்ளூடூத் 4.0 / Bluetooth 4.0
NFC
65T (software card emulation, payment methods and multi-tag support)
Positioning
Internal GPS antenna + GLONASS
Digital Compass

ஆடியோ
ஸ்பீக்கர் (Speakers)
Bottom Facing Dual Speakers
மைக்ரோஃபோன்(Microphones)
Tri-microphone with noise cancellation

PORTS, SLOTS, BUTTONS AND INDICATORS


Ports
Data & Charging: Micro USB 2.0
ஆடியோ /Audio: Jack 3.5mm
Buttons
பவர் பட்டன்/ Power Button
Volume Rockers
Capacitive / On-screen buttons
SIM
1 slot - Micro SIM
Indicators
1 LED notification light (multi-coloured)

மல்டிமீடியா

Audio supported
formats
Playback: MP3, AAC, AMR, OGG, M4A, MID, WMA, FLAC, APE, AAC, WAV
Recording: AAC, M4A
Video supported
formats
Playback: MP4, H.263, H.264, RMVB, FLV720P
Recording: MP4
Image supported
formats
Playback: JPEG, PNG, GIF, BMP
Output: JPEG, RAW

இந்த பதிவில் வரும் படங்கள் அனைத்தும் இணையத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

Wednesday, April 1, 2015

ஒன் ப்ளஸ் ஒன் (One Plus one )

ஒன் ப்ளஸ் ஒன் (One Plus one ) - சமீப காலமாக இந்த பெயரை தங்கள் கேட்டிருக்க வாய்ப்புகள் அதிகம்.என்ன இது ஏதோ ஒன்றாம் வாய்பாடு மாதிரி இருக்கிறதே என்று நீங்கள் எண்ணி இருக்கலாம். ஆனால் உண்மையில் இது ஒரு புதிய செல்பேசி (மொபைல் ) . சந்தையில் அறிமுகமாகி அனைவரிடமும் வரவேற்ப்பை பெற்றுருக்கிறது.


இந்த மொபைல் பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் முன் உங்களிடம் ஒரு கேள்வி எழலாம் , இந்த மொபைல் அறிமுகபடுத்திய நிறுவனம் மற்றொரு சீன நிறுவனம் தானே இதில் என பெரிய ஒரு ஆச்சிரியம் என நீங்கள் கேட்கலாம். உண்மைதான் ஆனால் மற்ற சீன நிறுவங்களை விட இந்த நிறுவனம் பல புதிய யுத்திகளை பயன்படுத்தி இன்று ஆப்பிள் ,சாம்சங் மற்றும் பல முன்னணி நிறுவனங்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

சிறு வரலாறு :
சற்று பின் நோக்கி பயணித்து இந்த நிறுவனம் உருவான கதையை பார்ப்போம்.
டிசம்பர் 16 ,2013 பீட் லாவ் (Pete Lau) என்பவரால் ஒன் பிளஸ் ஒன் தொடங்கப்பட்டது.இவர் ஓப்போ (OPPO) என்கின்ற பிரபல சீன மொபைல் நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் ஆவார் . இந்நிறுவனத்தின் குறிக்கோள் (Motto ) குறைந்த விலையில் சிறந்த மொபைல் தயாரிக்க வேண்டும் என்பது தான்.நாங்கள் பெயரளவில் மட்டும் வித்தியாசமாக இல்லாமல் செயலிலும் இருப்போம் என்று இவர் கூறுகிறார். பிரபல நிறுவனம் சயனொஜென்  (Cyanogen Inc ) உடன் பிரத்தியேக உரிம ஒப்பந்தம் மேற்கொண்டு  இந்நிறுவனத்தின் மென்பொருளை சயனொஜென்  நிறுவனத்தின் கஸ்டம் (custom ) அண்டுராயிடை  (Android) பயன்படுத்தி கொள்ள முடிவு செய்யப்பட்டது .ஆனால் இந்தியாவில் இந்த ஒப்பந்தம் செல்லாமல் போனது வேறு கதை .
முதல் ஒன் ப்ளஸ் ஒன் (One Plus one ) மொபைல் ஏப்ரல் 23,2013 ஆம்  தேதி வெளியிடப்பட்டது.17 நாடுகளில் அறிமுகபடுத்தப்பட்டு இந்தியாவிலும் டிசம்பர் 2014 இல் அமேசான் இணையத்தளத்தின்  மூலம் விற்பனைக்கு அறிமுகமாகியது . தற்பொழுது 35 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த மொபைல் வெற்றிகரமாக விற்பனையாகி வருகிறது.

இந்த மொபைல் போனில் உள்ள பல்வேறு அம்சங்கள் பற்றி மற்றொரு பதிவில் பார்க்கலாம்...


வலை இன்னும் வளரும் .........(To be contd.)