Sunday, July 26, 2015

விண்டோஸ் 10 பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (Learn about windows 10)


மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 , ஜூலை 29ஆம் தேதியில் இருந்து பயன்பாட்டுக்கு வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.
தற்பொழுது பயன்பாட்டில் உள்ள விண்டோஸ் 8.1  இதற்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் 8 ஆகியவை எதிர்பார்க்கப்பட்ட அளவில் பெரிய வெற்றியை அளிக்காத நிலையில் விண்டோஸ் 10 எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.விண்டோஸ் 10 பி.சி (PC ),டேப்லெட் மற்றும் மொபைல் ஆகியவற்றுக்கு எல்லாம் பயன்படுத்தக்கூடிய , மேம்படுத்தபட்ட ஒரு ஆப்பரேடிங் சிஸ்டமாக(OS) விளங்க வேண்டுமென்ற நோக்கோடு உருவாக்கப்பட்டதாகும்.



நீங்கள் விண்டோஸ் 10 மென்பொருளை முன்பதிவு செய்யாவிடில் இந்த கட்டுரையை கட்டாயம் வாசிக்க வேண்டும். விண்டோஸ் 10 மென்பொருள் ஏற்கனவே விண்டோஸ் 7 மற்றும் 8.1 மென்பொருளை பயன்படுத்துபவர்களுக்கு பல்வேறு அலைகளில் பதிவிறக்கம் கிடைக்குமாறு வசதி செய்யப்பட்டுள்ளது .

விண்டோஸ் 10 பற்றி மேலும் தொடர்ந்து பார்க்கும் முன் சில முக்கிய தகவல்களை பார்க்கலாம்.

முக்கிய நோக்கம் : முழுமையான விண்டோஸ் மென்பொருளை மேம்படுத்தல் .

வெளியிடப்படும் தேதி : ஜூலை 29.

விலை : ஏற்கனவே விண்டோஸ் 7 மற்றும் 8.1 மென்பொருளை வைத்திருபவர்களுக்கு ஒரு வருடம் இலவச பதிவிறக்கம் செய்ய முடியும்.அதற்கு பின் $119/£99/€135 (இந்திய மதிப்பில் சுமார் 100000 ரூபாய் )

மென்பொருளை இன்ஸ்டால் செய்ய தேவைப்படும் குறைந்தபட்ச அம்சங்கள்:

லேட்டஸ்ட் ஓ.ஸ்  (OS)- விண்டோஸ் 7 SP1 அல்லது விண்டோஸ் 8.1 நமது கணினியில் இருக்க வேண்டும்.கீழே உள்ள படத்தில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.


  • Processor: 1 gigahertz (GHz) or faster processor or SoC
  • RAM: 1 gigabyte (GB) for 32-bit or 2 GB for 64-bit
  • Hard disk space: 16 GB for 32-bit OS 20 GB for 64-bit OS
  • Graphics card: DirectX 9 or later with WDDM 1.0 driver
  • Display: 1024x600

மேலே உள்ள தகவல்களில் முக்கியமானது விண்டோஸ் 10 இன் விலை.மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சார்பாக பேசிய டெர்ரி மயேர்சன் அவர்கள் அறிவித்தது என்னவென்றால் விண்டோஸ் 7 மற்றும் 8.1 வைத்திருபவர்களுக்கு விண்டோஸ் 10 இலவசமாக கிடைக்கும் ஆனால் விண்டோஸ் 10 வெளியான ஒரு வருடத்திற்குள் பதிவிறக்கம் செய்யாவிடில் பின்பு விலை கொடுத்து வாங்கியாக வேண்டும்.

முன்பதிவு செய்யும் முறை :
முன்பு போல் இல்லாமல் இம்முறை மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய ஒரு யுத்தியை கையாண்டுள்ளது . எல்லாருக்கும் ஒரேசமயத்தில் வெளியிடாமல் முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு வரிசையாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது .உங்களது கணினி விண்டோஸ் 10 பெற தகுதியானதென்றால் தற்பொழுது உங்கள் கணினியில் நீங்கள் கிழே  கொடுக்கபட்டவாறு ஒரு விண்டோஸ் சின்னம் காண முடியும்.


இந்த சின்னம் தோன்றினால் உங்களது கணினி விண்டோஸ் 10 பெற வரிசையில் உள்ளது என்று கூறலாம்.

இந்த சின்னம் தோன்றவில்லை என்றால் கிழே கொடுக்கப்பட்ட எதாவது ஒரு காரணத்தால் தான் என்று புரிந்து கொள்ளலாம் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியுள்ளது  ,

1)உங்களது கணினி விண்டோஸ் 7 அல்லது 8.1 போன்ற சமீபத்திய மென்பொருளை பெறாமல் இருப்பது .
2)விண்டோஸ் ஆட்டோமாடிக் அப்டேட் அணைத்து வைக்கப்பட்டிருக்கலாம் .
3)உங்களது கணினியில் இந்த ஆட்டோமாடிக் அப்டேட் வசதியை நீங்கள் பிளாக் அல்லது uninstall செய்யப்பட்டிருக்கலாம்.
4)உங்களது கணினி நம்பகமான விண்டோஸ்யை  இல்லாமல் pirated விண்டோஸ் கொண்டிருக்கலாம்.

எப்படி விண்டோஸ் 10 மென்பொருளை பெறமுடியுமென்று பார்த்தோம்.
விண்டோஸ் 10 இல் உள்ள அம்சங்களை பார்ப்போமா . தொடர்ந்து படியுங்கள்,

எளிய ஸ்டார்ட் மெனு :

விண்டோஸ் 8.1 இல் ஸ்டார்ட் மெனு இல்லாதது ஒரு பெரிய குறையென்று கருதப்பட்டது.இதை நிவர்த்தி செய்ய விண்டோஸ் 10 இல் பழையமாறு ஸ்டார்ட் மெனு சேர்க்கப்பட்டுள்ளது.இது முன்புபோலல்லாமல் விரிவு படுத்தப்படுள்ளது.இதனால் எல்லாருக்கும் இயக்க எளிதாகின்றது. கிழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் பார்க்கலாம்.



பல லட்சம் பேர் பயன்படுத்தி குறைகளை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது :

விண்டோஸ் இன்சைடர் ப்ரோக்ராம் மூலம் பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஏற்கனவே விண்டோஸ் 10 மென்பொருளை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் .இதன் மூலம் தொடக்கத்தில் இவர்களின் பங்களிப்பு மூலம்  இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.


கோர்டனா (Cortana ) :

கோர்டனா அம்சம் iphone இல் உள்ள சிறி (siri ) மற்றும் அண்டுராஐடு மொபைல்களில் உள்ள கூகிள் நௌ (Google now ) போன்றவற்றிருக்கு போட்டியாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாம் நமது கணினியுடன் நமது குரல் மூலம் தொடர்புகொண்டு தகவல்களை அல்லது தகவல்களை எளிதாக காண முடியும்.உதாரணத்திற்கு நாம் நமது கணினிக்கு இந்த மாதம் எடுத்த படங்களை மற்றும் காண்பிக்குமாறு உத்தரவு பிரபிக்கலாம்.



புதிய வெப் பிரௌசெர் (New web browser ):

மைக்ரோசாப்ட் 10 இல் ஒரு புதிய வெப் பிரௌசெர் அறிமுகப்படுத்தப்படுள்ளது .இதன் பெயர் மைக்ரோசாப்ட் edge .முன்பு போலல்லாமல் சிறந்த ஒரு ப்ரௌசிங் அனுபவத்தை கொடுக்கும் என்று எதிர்பார்கப்படுகின்றது .நாம் குறிப்புகளை எடுக்க முடியும் மேலும் அந்த குறிப்புகளை நமது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.இந்த பிரௌசெருடன் கோர்டனா இணையும் பொழுது பல புதிய அனுபவங்களை பெறமுடியும்.




பல்பணி ஆற்றல் :

முன்புபோலல்லாமல் பல்வேறு ஆப்களை ஒரே சமயம் இயக்கி அதனை ஒரே சமயம் பார்க்கும் வசதி விண்டோஸ் 10 இல் உள்ளது.நான்கு விண்டோஸ் மூலம் ஒரே சமயம்  நாம் பார்க்கலாம்.


இவைமற்றுமல்லாமல் மேலும் பல அம்சங்களை தாங்கி வரும் விண்டோஸ் 10 மென்பொருளை பெற தயாராகிவிட்டீர்களா .

1 comment: