Wednesday, July 15, 2015

தூக்கத்தை கண்காணிக்க உதவும் Apps(Monitor your sleep using Apps)

நம் எல்லோருக்கும் இரவில் அமைதியான தூங்குவது என்பது இன்றியமையாவதாகும். அவ்வாறிருக்க சிலருக்கு இரவில் சில காரணங்களால் நல்ல தூக்கம் அமைவதில்லை.இதை போக்க சில நல்ல பழக்கவழக்கங்களை கடைபிடித்தால் போதுமானது , மேலும் நமது தூக்க சுழற்சியை  (ஸ்லீப் சைக்கிள் ) நாம் கண்காணித்து அதில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமெனில் அதை மேற்கொள்ளலாம்.இதை நாம் சில ஸ்மார்ட் ஆப்கள் மற்றும் சில அணியும் கேஜெட்கள்  போன்றவற்றின் உதவியுடன் கண்காணிக்கலாம்.இவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.

ஸ்லீப் ஆஸ் ஆண்டுராய்டு(Sleep as android ) :

இதன் பெயரில் இருப்பது போல்  ஆண்டுராய்டு மொபைலுக்கு மட்டுமே இந்த ஆப் உள்ளது.நம் தூக்கத்தை கண்காணிக்க உதவும் தலை சிறந்த ஆப் ஆகும்.முதலில் நம்மை காலையில் எழுப்புவதற்கு உருவாக்கப் பட்டதாகும் . பின்பு படிப்படியாக மேன்படுத்தப்பட்டு இன்று பல அம்சங்களை உட்கொண்டுள்ளது.இந்த ஆப் நமது தூக்கத்தை கண்காணித்து நமது தூங்கும் பழக்க வழக்கங்களை வரைபடங்கள் மூலம் தெரிவிக்கும்.மேலும் நமது தூங்கும் முறைகள் சரியாக இல்லையென்றாலோ அல்லது தூக்கம்  பற்றாக்குறை இருந்தாலோ நம்மை இந்த ஆப் எச்சரிக்கவும் செய்யும்.அதுமட்டுமல்லாமல் நாம் தூங்கும் அறையில் உண்டாகும் சத்தத்தை பதிவு செய்து நாம் தூங்கும் பொழுது குறட்டை விடுகிறோமா ,தூக்கத்தில் பேசும் பழக்கம் இருக்கிறதா அல்லது வேறு சில குறைபாடுகள் உதாரணம் தூக்கத்தில் மூச்சுத்திணறல் உண்டாகிறதா என்றெல்லாம் கண்டறிய உதவுகின்றது.மேலும் அதிகாலையில் நம்மை மென்மையாக நமது மனதுக்கு இதமான இயற்கை ஒலிகள்,இதமான இசைகள்,அல்லது நாம் தேர்ந்தெடுக்கும் இசையை ஒலிக்க செய்து நம்மை எழுப்பும்.ஆனால் முதல் இரு வாரங்கள் மட்டுமே இந்த ஆப்பை நீங்கள் இலவசமாக பயன்படுத்த முடியும்.அதற்கு மேல் சிறு தொகையை கொடுத்து நீங்கள் நிரந்தரமாக பயன்படுத்த முடியும்.









ஸ்லீப் சைக்கிள் (Sleep cycle )


ஸ்லீப் சைக்கிள் ஆப்பிள் மற்றும்  ஆண்டுராய்டு மொபைலில் பயன்படுத்த கூடிய ஆப் ஆகும்.நம்மை தூங்கும் பொழுது கண்காணித்து நமது அடுத்த நாள் காலையில் சிறந்த நேரத்தை தேர்ந்தெடுத்து நம்மை எழுப்புகின்றது.இந்த ஆப்பும் சந்தையில் சிறந்த ஆப் ஆகும்.பல்லாயிரக்கணக்கான ரசிகர் கூட்டம் உள்ளது இந்த ஆப்புக்கு.மேலும் இது ஒரு டாலர் மட்டுமே ஆகும்.(இந்திய மதிப்பில் சுமார் 60 ரூபாய் ஆகும்.இந்த ஆப் நாம் தூங்கும் பொழுது நமது மொபைலை எங்கே வைக்க வேண்டும் என்று கூட நம்மை அறிவுறுத்தும்.இதனால் நாம் தூக்கத்தில் உருளும் பொழுதும் நடு இரவில் விழிக்கும் இந்த ஆப் அறிய முடிகின்றது.இது போல 2-3 நாட்களுக்கு நமது தூக்கத்தை கண்காணித்து நமது தூங்கும் பழக்கத்தைஅறிந்து நமக்கு எளிதில் புரியுமாறு வரைபடத்தின் மூலம் விளக்குகின்றது.நமது அலாரம் நம்மை எழுப்பும் முன்னரே இந்த ஆப் நமது தூக்கத்தை அறிந்து மெல்லிய இதமான இசையை ஒலித்து நம்மை தூக்கத்தில் இருந்து எழுப்ப நம்மை தயார் படுத்துகின்றது.மேலும் நமது தூக்கம் இல்லா இரவுகளை அறிந்து நாம் எடுக்கும் முயற்சிகளை அறிந்து(உதாரணம் நாம் வெப்பநிலையை மாற்றியமைப்பது ,மனதுக்கு  பிடித்தமான இசையை கேட்பது போன்றவை ) இந்த ஆப்  அறிந்து பின்பு அதை நமக்கு பரிந்துரைக்கிறது.

இந்த ஆப்பின் அம்சங்களை சற்று விரிவாக பார்க்கலாம் :

ஸ்லீப் சைக்கிள்:
நாம் தூங்கும் பொழுது நாம் பல தூக்க சுழற்சிகளை மேற்கொள்கிறோம்.முதலில் வருவது மெல்லிய தூக்க நிலையாகும்  , தொடர்ந்து  ஆழ்நிலை தூக்க நிலை மற்றும் கனவு நிலை(REM என்று அழைக்கப்படுகின்றது ) தூக்க சுழற்சிகளை மேற்கொள்கிறோம்.ஒரு முழு தூக்க சுழற்சி 90 நிமிடங்கள் நீடிக்கின்றது மேலும் இந்த சுழற்சிள்  பல முறை ஒன்றன் பின் ஒன்றாக தொடரும் .

ஸ்லீப் சைக்கிள் அலாரம் :
நமது அசைவுகள் ஒவ்வொரு சுழற்சியின் பொழுதும் மாறும்.ஸ்லீப் சைக்கிள் அலாரம் நமது மொபைலில் உள்ள accelerometer யை பயன்படுத்தி நாம் எப்பொழுது மெல்லிய தூக்க நிலையில் இருக்கின்றோமோ அப்பொழுது மட்டுமே நம்மை எழுப்புகின்றது.

ஸ்லீப் சைக்கிள் வரைபடங்கள் :
வழக்கமான தூக்கம்



இந்த வரைபடம் பல்வேறு தூக்க சுழற்சிகளை காண்பிக்கின்றது .இந்த வரைபடத்தின் மூலம் நமது தூக்கத்தின் பல்வேறு நிலைகளை பார்க்க முடிகின்றது.



ஒழுங்கற்ற தூக்கம் :
ஒழுங்கற்ற தூக்கத்தின் வரைபடத்தை மேலே காணலாம்.இங்கே மெல்லிய தூக்க நிலை 2-4 மணி அளவில் உள்ளது.மேலும் 7.30 மணி அளவில் தூக்கமின்றி முழித்து இருப்பதை காண முடிகின்றது.



தொந்தரவுமிக்க தூக்கம்


மேலே உள்ள நபர் மது அருந்தி விட்டு படுத்ததால் ஆழ்நிலை தூக்கத்தை அடைய முடியாமல் இருப்பதை பார்க்க முடிகின்றது.





இது போன்ற தொழில்நுட்பங்கள் மூலம்  நமது பிரச்சனைகளை களைய முடியாதென்றாலும் , அதை கண்டறிய சிறிதளவிலேனும்  உதவுகின்றதென்றே சொல்லலாம்.

0 comments:

Post a Comment