Sunday, May 10, 2015

உலகின் முதல் 4GB RAM மொபைல்(Worlds first 4 GB Mobile)



 உலகின் முதல் 4GB RAM மொபைல்:-



Zenfone 2 (ZE 55IML) என்ற புதிய மொபைல் தற்பொழுது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இது Asus நிறுவனத்தின் படைப்பாகும்.புதியதொரு தொழில்நுட்பத்தை கொண்டுள்ள இந்த மொபைல், அதிவேக ஆற்றல், அதிவேக சார்ஜ் செய்யும் வேகம், புதியதொரு UI ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. பல புதிய அம்சங்களை கொண்டுள்ள இந்த அழகிய மொபைலை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.


ஜென்னின் அழகு:-

       ஜென் மொபைல் மிகவும் மெல்லிய வடிவமைப்பை கொண்டுள்ளது. இதன் தடிமன் 3.9 mm மட்டுமே உள்ளது. இது ஒரு தொழில்நுட்ப சாதனையாக கருதப்படுகிறது. இதனால் கைக்கு மிகவும் அடக்கமாகவும், வசதியாகவும் பிடிக்க முடிகின்றது. மேலும் இதன் வடிவமைப்பை பார்க்கும்பொழுது ஆடம்பரமாகவும், அற்புதமாகவும் உள்ளது.

எற்கனாமிக்  வடிவமைப்பு மற்றும் பின்னல் இருக்கும் கட்டுப்பாட்டு கீ :-

       இதன் புரட்சிகரமான வடிவமைப்பு, பின் பேனலில் ஒரு கீ பொத்தனை கொண்டுள்ளது. இதனை கொண்டு சுலபமாக செல்பிக்களை எடுக்கவும், ஒலியின் அளவை குறைக்க / அதிகரிக்க, மேலும் சில காரியங்களை நீங்கள் இடக்கை /வலக்கை பழக்கம் உடையவராக இருந்தாலும் அச்சம் இல்லாமல் மொபைலை பிடித்துக்கொள்ள வசதியாக மற்றும் பாதுகாப்பாக உணர முடிகின்றது.





அளவு:-
 
       Zenfone 2 ( ஜென்போன்  2) 5.5 இன்ச் அளவில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் நேரில் பார்க்கையில் இது 5 இன்ச் மொபைலை போல் சிறிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த அற்புதமான வடிவமைப்பு பெடேசல்(bedzel )  அளவை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைத்ததால் சாத்தியமாகின்றது. இதனால் screen to body ratio 72%ஆக உள்ளது.


உங்களுக்கு மட்டுமான பிரத்தியேக டிசைன்கள்:-

          டிரான்ஸ்பூயுஷன் மற்றும் இல்லியூஷன் ஆகிய இரு படைப்பில் உங்களை மகிழ்விக்க இருக்கின்றது.



அதிவேக செயல்திறன்:-

ஜென்போன் 2 இல் 64 பிட் ,2.3 GHz சுப்பர் குவாட் கோர் (Quadcore ) இன்டெல் ஆடொம் (Atom ) ப்ரோசெசர் உள்ளடக்கி உள்ளது .மேலும் உலகின் முதன் 4 GB ராம் (RAM ) கொண்டு உற்பத்தியாகியுள்ள மொபைல் தற்பொழுது இது ஒன்றே ஆகும்.(4 GB  dual DDR3 RAM ). மேலும் LTE  CAT 4தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.இதனால் நாம் பதிவிறக்கம் செய்யும் பொழுது 250 MB /s என்ற
வேகத்தில் தகவல்களை பதிவிறக்கம் செய்ய முடிகின்றது. இத்தனை அம்சங்களை கொண்டுள்ள ஜென்போன் 2, நமது கற்பனைக்கு எட்டாத அளவுக்கு ஆற்றலை வெளிபடுத்த வல்லது.



கேமரா:-

இந்த விலையில் உள்ள மற்ற மொபைல்களை போல் ஜென் மொபைலிலும் 13MB , F 2.0 கொண்டுள்ள லென்ஸ், அதிக துல்லியமான படங்களை எந்தவித லேக் (lag ) இல்லாமல் எடுக்க  உதவுகின்றது. மற்ற மொபைல்களில் இல்லாத பிக்ஷெல் மெர்ஜிங் தொழில்நுட்பம் உள்ளது. இதனால் இரவில் ஒளி இல்லாத இடத்திலும் பிளாஷ் 400% அதிக பிரகாசமாக  படங்கள் எடுக்க முடியும். சூப்பர்  ரெசொல்யூஷன் மோட் பயன்படுத்தினால் மிக அதிக ரெசொல்யூஷன் கொண்ட 52 MP வரை சிறந்த படங்களை எடுக்க முடியும். இதன் கேமரா பிக்சல் மாஸ்டர்  (Pixel Master) என்று அழைக்கப்படுகின்றது. மேலும் பிக்சல் மாஸ்டர் பாக்லைட் (Backlight) மோடில் பல படங்களை தானாக எடுத்து அவற்றை ப்ராசெஸ் செய்து 400% அதிக பிரகாசமான படங்களை நமக்கு கொடுக்கின்றது. மேலும் அவை இயற்கையாக எடுக்கப்பட்டது போல் இருக்கும்.




லோ லைட் மோட்:-

 இந்த மோடில் பிக்சல் மெர்ஜிங் தொழில்நுட்பம் (நான்கு அடுத்தடுத்த பிக்சலை இணைத்து புதிய பிக்சலை உருவாக்குதல்) மற்றும் உயர்தர இமேஜ் பிராசசிங் அல்காரிதங்களை பயன்படுத்தி குறைந்த வெளிச்சம் கொண்ட இடங்களில் எடுக்கும் படங்கள்  கூட சிறப்பாக இருக்கும். படங்களில் இருக்கும் நாய்ஸ்யை  (noise) குறைத்து வண்ணங்கள் மற்றும் கான்ட்ராஸ்ட்டை கூட்டுகின்றதனால் பிளாஷ் பயன்படுத்தாமலே சிறந்த படங்களை எடுக்க முடிகின்றது.


அதிவேக சார்ஜிங்:-

Asus  பூஸ்ட் மாஸ்டர் தொழில்நுட்பத்தால் இந்த மொபைலை நாம் 39 நிமிடங்களிலேயே 60% சார்ஜ் செய்ய முடியும்.



ஜென் யு.ஐ:-

எளிய அனைவருக்கும் ஏற்றவாறு உள்ள ஜென் யு.ஐ மற்றொரு சிறப்பம்சமாகும். உடனுக்குடன் கிடைக்கும்  அப்டேட்டுகள், பாதுகாப்பு அம்சங்கள், நமக்கு பாதுகாப்பையும்,  சிறந்த அனுபவங்களையும் கொடுக்கின்றது.






0 comments:

Post a Comment