Saturday, April 11, 2015

ஒன் ப்ளஸ் ஒன் (One Plus one ) Part 3- சிறப்பு அம்சங்கள்

போன பதிவில் இந்த மொபைலின் பல்வேறு Technology அம்சங்கள் பற்றி பார்த்தோம்.
இந்த பதிவில் அதை பற்றி சிறிது விரிவாக பார்ப்போம்,

1)ப்ரோசெசர் (Processor ) :
இந்த மொபைலின் உள்ள சக்தி வாய்ந்த Qualcomm© Snapdragon™ 801 processor with 2.5GHz Quad-Core CPU உள்ளது . Qualcomm நிறுவனத்தை பற்றி அனைவரும் அறிந்து இருக்கலாம்.உலகின் பல முன்னணி மொபைல் நிறுவனத்தில் Qualcomm நிறுவனத்தின் ப்ரோசெசர் பயன்படுத்தப்படுகின்றது (உதாரணம் சாம்சங் ).இந்த ப்ரோசெசர் பல ப்ரோசெஸ்  (Process)  களை சுலபமாக இயக்க வல்லது . மொபைல் போன்களின் ஆற்றலை கணிக்க உதவும் அன்டுடு (Antutu ) முடிவுகள் கீழே பார்க்கலாம்,





ஒன் ப்ளஸ் ஒன் கூகிள் நெக்சஸ் மொபைலுக்கு அடுத்தபடியாக உள்ளது . ஒன் ப்ளஸ் ஒன் இன் விலையை (இந்திய விலை 23000 vs நெக்சஸ் 6 - 49000) பார்கையில் எந்தவித தயக்கமின்றி நாம் தேர்ந்தெடுக்கலாம்.

2)Cyanogen UI :
உலகளவில் ஆண்டுராய்டு(android ) OS ஐ  தங்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து பிரபலமான Cyanogen நிறுவனம் , முதன் முதலில் மொபைலுடன் சேர்த்து அறிமுகமாகி உள்ளது . இன்னொரு சிறப்பம்சம் என்வென்றால் உங்கள் மொபைலை நீங்கள் ரூட் (Root ) செய்ய வேண்டிய அவசியம் இல்லை (ரூடிங் -Rooting என்றால் என்வென்று மற்றொரு பதிவில் விரிவாக பார்க்கலாம் ). Cyanogen பயன்படுத்துவதில் என்ன வித்தியாசம் என்றால் பல நுண்ணிய அளவில் customisation (நமக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்தல் ) செய்து கொள்ள முடியும்.இவ்வசதி ஸ்டாக் ஆண்டுராய்டில் (stock  android )  சாத்தியம் இல்லை .



3)சேமிப்பு / கொள்ளலவு :
இந்த மொபைல் 16அல்லது 64 GB கொள்ளலவில் கிடைக்கும். மிக விரைவாக நமது தகவல்கலை காபி (copy ) செய்யலாம் . கூடுதல் மெமரி கார்டு பொருத்துவதற்கான வசதி இல்லையென்றாலும் 64 GB போதுமானது .
மேலும் 1866MHz  வேகத்தில் இயங்கும் 3 GB LP-DDR3 RAM குறைபாடற்ற பல்பணிகளை (Multitasking ) அனுமதிக்கிறது. 

4)கேமரா :
பின் கேமரா  :13 மெகாபிக்ஸல் சோனி Exmor IMX214 , F / 2.0 துளை (Aperture )கொண்ட கேமரா ,  குறைந்த ஒளியில் கூட  அற்புதமான படங்கள் எடுக்க வல்லது . எங்கும் பிரகாசமான, கூர்மையான புகைப்படங்கள், எப்போது ஷூட்.மேலும் இதில் உள்ள இரட்டை LED ஃப்ளாஷ் இரவில் கூட சிறந்த படங்களை எடுக்க உதவும் .




முன் கேமரா : 5 மெகாபிக்ஸல் உங்களது செல்பிகளை சிறப்பாக எடுக்க உதவும்.

5)பேட்டரி :  குவால்காம் © ஸ்னாப் டிராகன் கொண்டுள்ள சிப்செட்( Qualcomm© Snapdragon™ 801 chipset) மற்றும்  3100 mAh பேட்டரி ,CABC and DRAM (Display RAM) தொழில்நுட்பம் கொண்டுள்ளது.இந்த தொழில்நுட்பங்கள் மின்சாரக்குறைத்து , நாள்முழுதும் பேட்டரி நீட்டிக்க    உதவுகின்றது .அனால் இந்த பேட்டரியை கழற்ற முடியாது .



6)எளிதான  திரை சைகைகள் :(On screen gestures for easy control)
முன் எப்போதும் விட விரைவில் உங்கள் பிடித்த பயன்பாடுகளை துவக்கவும். இரண்டு முறை தட்டி, உங்கள் திரை விழிக்க வைக்கலாம்  அல்லது உங்களுக்கு விருப்பமான பயன்பாட்டை தொடங்க திரையில் ஒரு சாதாரண படத்தை வரைய வேண்டும்(உதாரணம் O  வரைந்தால் கேமரா துவங்கும் , V - ஃபிளாஷ்)

மேலும் ,



Wi-Fi 2.4/5GHz
802.11 b/g/n/ac

Power off
Alarm

GPS & GLONASS

NFC

USB OTG

Gyroscope

Compass

Proximity Sensor

Light Sensor

Accelerometer

0 comments:

Post a Comment