Monday, June 1, 2015

உடல்நலத்தை பேண உதவும் சில பிட்நெஸ் ஆப் (Android apps which helps to maintain our health)

இன்றைய அதிவேக உலகில் நமது உடல் நலத்தை பாதுகாப்பது என்பது நம்மில் பலருக்கும் கடினமாக உள்ளது.காலையில் எழுந்து எதை பார்க்கிறோமோ இல்லையோ நமது மொபைலை தான் பார்க்கிறோம்.நம்மில் பலரிடமும் ஸ்மார்ட் மொபைல் உள்ளது.அதை பயன்படுத்தி எவ்வாறு நமது உடல் நலத்தை பாதுகாக்கலாம் என்று பார்க்கலாம்.(இங்கு கொடுக்கப்பட்ட ஆப் (Appsஆண்டுராய்டு தளத்தில் இயங்கும்.இவற்றில் சில IOS (அப்பிள் ) மொபைலிலும் இயங்கும்.


1)கூகிள் பிட் (Google Fit ) :

கூகுளின் தயாரிப்பான இந்த கூகிள் பிட் , அனைவருக்கும் புரிந்து கொள்ள உதவும் எளிதான UI கொண்டுள்ளது.ஜி பி எஸ் (GPS ) உள்ள மொபைல்களில் இது சிறப்பாக செயல்படும்.மேலும் நாம் தினந்தோறும் மேற்கொள்ளும் நடை,ஓட்டம் மற்றும் மிதிவண்டி ஒட்டுதல்  போன்றவற்றை ஆட்டோமாடிக் காக இது கண்காணித்து கொள்ளும் ஆற்றல் மிக்கது . இது கூகிள் ப்ளே ஸ்டோர் (play store ) இல் இருந்து நாம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நமது எடை ,உயரம் ,வயது போன்ற தகவல்களை ஒரு முறை நாம் பதிவு செய்து விட்டால் போதும்.நாம் தினமும் அடைய விரும்பும் இலக்கை நாம் முடிவு செய்து இந்த ஆப்-பில் பதிவு செய்தால் , ஒவ்வொரு முறை நாம் இலக்கை அடைந்து விட்டால் இந்த ஆப் நமக்கு அறிவிக்கும்.மேலும் வாரம்,மாதம் நாம் அடைந்த இலக்கையும் இதில் பார்க்கும் வசதி உள்ளது.






 

மேலும் நாம் நடந்த தூரம் , நேரம்,எவ்வளவு கலோரீஸ் எரித்தோம் (calories Burnt ) போன்ற தகவல்களை அறியலாம்.



2)ரன் கீப்பர் (Run Keeper ) : 
இது மற்றொரு பிரபலமான ஆப் ஆகும்.இதில் ஓட்டம் ,நடை,மிதிவண்டி ,மற்ற பயிற்சிகள் போன்றவற்றை நாம் அளக்க முடியும்.ஆனால் நாம் ஒவ்வொரு முறையும் எந்த பயிற்சி மேற்கொள்ள போகிறோம் என்று இதில் நாம் தேர்வு செய்தபின் நமது பயிற்சியை தொடங்க வேண்டும்.பயிற்சி முடித்தவுடன் அதனை நிறுத்தவும் வேண்டும்.மிகவும் துளியமாக முடிவுகளை கொடுக்கும்.மேலும் GPS துணையுடன் நாம் கடந்த பாதையை maps மூலம் பார்க்கும் வசதி உள்ளது.நாம் பயிற்சி மேற்கொள்ளும் பொழுது இடையே நாம் அடைந்த இலக்கை அறிவிக்கும் வசதி இதில் உள்ளது,இதனால் நாம் ஒவ்வொரு முறையும் மொபைலை எடுத்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.


மேலும் பல அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஆப்.இந்த ஆப்பை நாம் ஸ்மார்ட் வாட்ச்சுடன் இணைத்து பயன்படுத்தும் வசதி உள்ளது.மாரத்தான் பயிற்சி எடுக்கும் பொழுது மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.நமது பயிற்சியை கண்காணித்து நமது அடுத்த பயிற்சி எடுக்க நம்மை நியாபகப்  படுத்துகின்றது. சமுக இணையதளங்களை போல நமது நண்பர்களை நாம் இதில் சேர்த்துகொள்ளும் பொழுது அவர்கள் மேற்கொள்ளும் பயிற்சியையும் நாம்  பார்க்க முடிகின்றது.


  



ஆகவே இந்த அதிவேக வாழ்க்கையில் நாம் நமது உடல் நலத்திற்காக சில நிமிடங்களை ஒதுக்கி நமது வாழ்கையை நோயற்றதாக மாற்ற முயற்சிக்கலாம்.இதற்காக இது போன்ற ஆப்களை நமது மொபைலில் இன்ஸ்டால் செய்வோமானால் நமது அன்றாட வாழ்கையில் நமது பயிற்சி விவரங்களை பார்த்து , குறைவாக இருக்கும் பட்சத்தில் அதை அதிக்கரித்து நமது உடல் நலத்தை பேணி பாதுகாக்கலாம்.



0 comments:

Post a Comment