Friday, September 11, 2015

ஐ போன் 6s மற்றும் 6s ப்ளஸ் 3D வெளியிடப்பட்டது.

இன்று (09/09/2015) அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் நடந்த ஒரு நிகழ்வில் ஐ போன் 6s மற்றும் 6s ப்ளஸ் 3D போன்கள் ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக் வெளியிட்டார்.




செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி முதல் 12 நாடுகளில் இவை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.ஒப்பந்த முறையில் 16 GB 6s 199 $ ,6s பிளஸ் 299 $ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கூடுதலாக $100 செலுத்தினால் 64 GB மேலும் $100 செலுத்தினால் 128 GB போன்கள்கிடைக்கும்.ஆனால் இந்தியாவில் இம்முறை பிரபலமில்லாததால் நாம் மொத்த விலை செலுத்தினால் மட்டுமே இந்த போன்களை வாங்க முடியும். 6s 16 GB  மாடல் $649 , 64 GB  மாடல் $749 ,மற்றும் 128 GB மாடல் $849 கும் ஒப்பந்தம் இல்லாமல் விற்பனைக்கு கிடைக்கும் .
நான்கு வண்ணங்களில் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



புதிய அம்சங்கள் பலவற்றை எதிர்பார்க்கலாம்.3D டச் என்ற புதிய தொடுதல் முறையை இந்த போன்களில் அறிமுகபடுத்தி உள்ளது ஆப்பிள் நிறுவனம். இதன் செயல்முறை விளக்கத்தை ஆப்பிள் நிறுவனத்தின் youtube பக்கத்தில் காணலாம்,




மேலும் 12 MP கேமரா , 5 MP  முன் கேமரா, 4 K வீடியோ ரெகார்டிங் ,அதிவேக ஆட்டோ போகஸ் ,குறைந்த வெளிச்சத்திலும் சிறப்பான படங்களை எடுக்க உதவும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.மேலும் நமது குரலை எடுக்கும் படங்களில் பதிவு செய்யும் புதிய அம்சம் அறிமுக படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் புதிய processor (A9 SoC, with M9 motion co-processor integrated).இதனால் எந்தவித தங்கு தடையின்றி இந்த மொபைல் இயங்கும்.மேலும் விரிவான வேறு ஒரு பதிவில் இந்த மொபைலை அலசலாம்.

0 comments:

Post a Comment